அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. தேவைகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

சனி, 18 ஆகஸ்ட், 2012

பள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை


எங்கள் கிராம பள்ளி குழந்தைகள் அரசாங்க பள்ளிகூடங்களில் துரு பிடித்த மேசைகளை கொண்டு தான் கல்வி கற்கின்றார்கள். சிறந்த மேசைகள் கல்வி கற்க ஊக்குவிக்கும், மேலும் துரு மூலம் ஏற்படும் வியாதிகளை தடுக்க உதவும்.

உண்மையில் அரசாங்கம் இவ்வளவு தான் பள்ளிக்கு செலவிடுகின்றதா அல்லது கிடைக்கும் பணத்தை இடையில் உள்ள நிர்வாகிகள் தாங்கள் குடும்ப செலவிற்காகவும், வங்கி செமிப்பிர்காகவும், சொத்து குவிப்பதற்காகவும், தங்களை பெருமை பாடுவதர்காகவும் பயன்படுத்துகிறார்களா என்பது முறையாக கேட்டறிந்து தெளிவுபடுத்தி கொள்ளுங்கள்.

உண்மையில் தாங்கள் உதவி புரிய வேண்டுமெனின் பின்வரும் படிகளான முயற்சி எடுத்தால் சிறப்பாக அமையும்.

  1. இந்த மேசைகளை மாற்ற பள்ளி தலைமைஆசிரியர் மூலம் ஏதேனும் முயற்சி எடுக்க பட்டதா, அதற்க்கு அரசாங்கத்தின் பதில் என்ன என்பதை தகவல் உரிமை சட்டத்தின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். இதற்கான பதில் கிடைக்கவில்லை என்றாலும் தளத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
  2. இதற்கான நிதி உதவி அரசாங்கத்திடம் இல்லை அல்லது வழங்கப்படவில்லை என்ற பட்சத்தில், ஏன் வழங்கப்படவில்லை என்ற உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்து தெரிந்து கொள்ளுங்கள்.
  3. உண்மையில் இதற்க்கு அரசாங்கத்திடம் நிதி இல்லாத பட்சத்தில் உதவிகளை செய்ய முன் வாருங்கள். இல்லையெனில் அநியாயத்தை ஊக்குவிக்க நீங்களும் உதவி செய்கின்றீர்கள் என்பது குறிப்பிடதக்கது.இந்த மாணவர்கள் மேலும் கல்வியில் செழிக்க சிறந்த மேசைகள் தேவை.

திங்கள், 22 மார்ச், 2010

இலக்கமுறை நூலகம் தேவை (Digital Library)

வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சிகளில் தாள் மூலம் வரும் நூல்களை காசாங்காடு கிராமத்தை முழுவதும் நிரப்பி வைத்தாலும் இடம் பற்றாது. மேலும் தாள்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் மிகவும் குறைவான அளவே உள்ளது.

இதை தீர்க்கும் வகையில் முன்னூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் உள்ள கிராமத்தில் மேலும் மக்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்கும், மேலும் பட்டதாரிகளை உருவாக்குவதற்கும் இலக்கமுறை நூலகம் தேவை (Digital Library). இதற்கான இணைய வசதி கிராமத்தில் இருக்கும் "பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்" வழங்கும் அகண்ட அலைவரிசை இணைய வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். எண்ணிலடங்கா இணையபுத்தகங்கள் உடனுக்குடன் இணையத்தில் கிடைக்கும் வசதி.

மேலும் தேவைப்படும் தகவல்களை ஒரு நூலை அல்லது குறிப்பிட்ட நூல்களை மட்டும் நம்பி இல்லாமல் உலகம் முழுவதும் இணையத்தில் தேடி, சிறந்த கருத்துகளை தெரிந்து கொள்ளவும் உதவுகின்றது. இது ஒரு தனிமனிதனின் முன்னேற்றதிற்கு மட்டுமன்றி, கிராம முன்னேற்றத்திற்கும், இந்தியாவின் முன்னேற்றத்திற்கும், உலக முன்னேற்றத்திற்கும் பெரிதான வகையில் உதவும்.

மேலும் தாள்கள் தயாரிப்பதற்கான தேவைப்படும் மரங்கள் வெட்டபடுவதை தவிர்ப்பதன் மூலம் காசாங்காடு கிராமம் உலக சுற்றுசூழலை பாதுகாக்கும். கோள வெதும்பலை (Global Warming) குறைக்கவும் இது உதவும்.

எடுத்துக்காட்டான இணைய நூலகங்கள்:

http://www.ipl.org/
http://www.chennailibrary.com/
http://my.safaribooksonline.com/
http://books.google.com/
http://www.questia.com/Index.jsp
http://onlinebooks.library.upenn.edu/
http://www.thefreelibrary.com/திங்கள், 28 டிசம்பர், 2009

வாகனங்களுக்கு உச்ச வேக அளவு தேவைவளர்ந்த நாடுகளில் குடியிருப்பு பகுதிகளில் வாகனங்களுக்கு உச்ச வேக வரம்பு உள்ளது. தற்போது காசாங்காடு கிராமத்தில் இரண்டு அல்லது நன்கு சக்கர  மோட்டார் வாகனங்கள் செல்லும் போது மக்களின் பாதுகாப்பை மீறியே உள்ளது. எனவே  கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் வாகன உச்ச வேக வரம்பு தேவை.

ஞாயிறு, 4 அக்டோபர், 2009

விவசாயிகளுக்கு இலவச மருத்துவ, மருந்து காப்புரிமை தேவை

கிராம விவசாயிகளுக்கு மருத்துவ செலவு மிகவும் அதிகாமாக உள்ளது. விவசாயத்தில் வரும் வருமானத்தை வைத்து மருத்துவ செலவு செய்வது மிகவும் கடினமாக உள்ளது.   கிராம மற்றும் நகர அரசு மருத்துவமனையில் கிடைக்கும் வசதிகள் மிகவும் அளவானதே, தனியார் மருத்துவமனைகளில் தான் அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன.

மேலும் ஒரு தனி நபருக்கு கிடைக்கும் மருத்துவ சிகிச்சைகளை பதிவு செய்வதில்லை. இதனால் நோயாளி இதற்க்கு முன் எந்த எந்த மருத்துவ சிகிச்சைகளை பெற்றார் என்பதற்கான பதிவேடு இருப்பதில்லை. இலவச மருத்துவ காப்புரிமை மற்றும் மருந்து காப்புரிமை கிடைத்தால் இதன் மூலம் நோயாளிகளுக்கு என்ன மருத்துவ செலவு செய்யப்பட்டது, மருத்துவர் என்ன சிகிச்சை அளித்தார் என்பது தெளிவாக தெரியும்.

மேலும் மருத்துவர்கள் செய்யும் சிகிச்சைகளில் குறைகள் இருப்பின் தனி நபர்  பாதிக்கபடாமல் இருக்கவும், முறைப்படியாக நஷ்ட ஈடு வழங்கவும் உதவி புரியும். மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் சரியாக சோதனை செய்யப்படாத மருந்துகளை அளிப்பதின் மூலாமாக நோயாளிகளுக்கு ஏற்படும் சங்கடங்களை நஷ்ட ஈடாக வழங்கவும் உதவி புரியும்.

இதை அனைத்தும் அரசு, இந்திய மக்களுக்கு உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு இலவசாமாக அளித்தால் மிகவும் உதவியாய் அமையும்.

இவ்வாறே வளர்ந்த நாடுகளில் விவசாயிகளை அரசு பாதுகாக்கின்றது.

மாநில மற்றும் மத்திய தேர்தலில் வாக்களிப்பதற்கு முன் இவற்றை பற்று சிறிது சிந்திப்போம்.

செவ்வாய், 22 செப்டம்பர், 2009

தானியங்கி வானிலை நிலையம் தேவை

தானியங்கி வானிலை நிலையம் தேவை. அரசாங்கம் அளிக்கும் வானிலை அறிக்கைகள் வாழ்க்கைக்கு உபயோகமற்றதாக அமைகின்றது. நாளை முழுவதும் மழை என்றால் மறுநாள் முற்றிலும் சுல் என்று வெயில் அடிக்கும். வெயில் என்றால் மழை பொழியும்.

மனிதன் இவ்வாறு செய்யும் வேலைகளில் குறைகள் இருக்கும் என்பதற்காக தான் தானியங்கி வானிலை நிறுவனங்கள் அதை நிவர்த்தி செய்ய இருக்கின்றன. எங்கள் கிராமத்திற்கு அது அவசியம் ஒன்று தேவை. அதோடு அவை கொடுக்கும் தகவலை இணையத்தில் தானாகவே பதியும் வசதியும் தேவை.

நன்றி

புதன், 1 ஏப்ரல், 2009

குடும்பத்தில் ஒருவருக்கு வருடம் முழுவதும் வேலை வாய்ப்பு தேவை

அரசாங்கத்தின் வருடத்திற்கு நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம் (NREGA) எங்கள் கிராமத்திற்கு மிகவும் உதவியாக இருக்கின்றது.

வருடம் முழுவதும் வேலை வைப்பு கிடைக்கும் வகையில் தொழில் ரீதியாகவோ அல்லது அரசு வேலைவாய்ப்பு மூலம் செய்தால் கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பங்களின் வாழ்க்கைக்கு பெரிதும் உதவியாய் இருக்கும்.

செவ்வாய், 24 மார்ச், 2009

தன்னியங்கி காசாளர் இயந்திரம் தேவை - (ATM)


ஊரில் இந்தியன் வங்கி இருப்பது ஊர் மக்களுக்கு மிக பெரும் வசதியாகும். இந்தியன் வங்கிக்கு எமது நன்றிகள்.

அதே போல் தன்னியங்கி காசாளர் இயந்திரம் (ATM Machine) இருப்பின் அனைவருக்கும் மிகவும் வசதி. இந்த வசதிக்காக பட்டுகோட்டை அல்லது மதுக்கூர் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

மேலும் தன்னியங்கி காசாளர் இயந்திரத்தை படிக்காதவர் அல்லது உடல் ஊனமுற்றோர் கூட உபயோகிக்கும் முறை இருப்பின் அதுவே கிராமத்தின் மிக பெரிய வரபிரசாதம்.

இது காசாங்காடு கிராமம் மட்டுமன்றி அருகில் உள்ள கிராமங்களுக்கும் மிகவும் வசதியாக இருக்கும்.

புதன், 4 மார்ச், 2009

சூரிய சக்தி குழு விநியோகிப்பாளர்கள் தேவை

சூரிய சக்தி மூலம் குறைந்த செலவில் மின்சாரம் எடுக்க தற்போது தொழில் நுட்பங்கள் வளர்ந்துள்ளது.  

தற்போதுள்ள இத்துறையில் உள்ள முன்னோடி நிறுவனத்தை பற்றி இங்கே காணலாம்.சூரிய சக்தி குழு விநியோகிப்பாளர்கள் யாரேனும் இருந்தால் எங்கள் கிராம மக்களை அணுகவும். நன்றி.

திங்கள், 2 மார்ச், 2009

கேபிள் மூலம் இணைய இணைப்பு தேவை

90% வீடுகளில் தற்போது தொலைக்காட்சி ஒரு பொழுது போக்கு சாதாணமாக இருக்கின்றது. தொழில் செய்ய விரும்புவோர் கேபிள் வழி இணைய தொடர்பு (Cable Internet using DOCSIS) கொடுத்தால் கிராமத்தில் அனைவருக்கும் உதவியாக இருக்கும்.  

அது மட்டுமன்றி 90% மக்கள் வெளிநாட்டு தொடர்பு உள்ளவர்கள். வெளி நாட்டுக்கு தொடர்பு கொள்ளவும் அவை எளிதாக இருக்கும்.  

எங்களது கிராம தொலைபேசி இணைப்பகத்தில் "ஒளி இழை" (fiber optic telephone exchange) தொடர்பு உள்ளது. BSNL மூலம் கேபிள்லில் இணையத்தை இணைப்பதற்கு அவை உதவியாக இருக்கும்.

வியாழன், 4 டிசம்பர், 2008

குடிதண்ணீருக்காக மின் உற்பத்தி இயந்திரம் தேவை

எங்கள் கிராமத்தின் குடிதண்ணீர், ஆழ் குழாய் கிணறுகளை நம்பி இருக்கின்றது. ஆழ் குழாய் மொடோர்களை இயக்க மின்சாரம் தேவை.

தமிழ்நாடு மின்சார வாரியம் பெரும்பாலான சமயங்களில் மக்களுக்கு குடிதண்ணீர் தேவைப்படும் போது மின்சாரம் வழங்க படுவதில்லை. சில காரணங்கள் இயற்கையின் சீற்றமும் கூட.
இதனை சரி செய்ய மின் உற்பத்தி இயந்திரம் (Electric Generator) கிராமத்திற்கு தேவை.

இவைகளை நன்கொடை கொண்டு நடைமுறை படுத்தும் தொண்டூழியர் யாரேனும் ஊரில் இருந்தால் காசாங்காடு இணையதள குழுவை தொடர்பு கொள்ளவும். பொது மக்களின் நன்கொடை கொண்டு செலவு செய்து கணக்கு முறையாக பொது மக்களிடம் கொடுக்கும் அனுபவம் அவசியம்.

மேலும் தகவல்களுக்கு காசாங்காடு கிராமத்தின் இணையதள குழுவை அல்லது கிராமத்திற்கு சென்று நேரடியாக பார்வை இடவும்.