அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. தேவைகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

திங்கள், 22 மார்ச், 2010

இலக்கமுறை நூலகம் தேவை (Digital Library)

வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சிகளில் தாள் மூலம் வரும் நூல்களை காசாங்காடு கிராமத்தை முழுவதும் நிரப்பி வைத்தாலும் இடம் பற்றாது. மேலும் தாள்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் மிகவும் குறைவான அளவே உள்ளது.

இதை தீர்க்கும் வகையில் முன்னூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் உள்ள கிராமத்தில் மேலும் மக்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்கும், மேலும் பட்டதாரிகளை உருவாக்குவதற்கும் இலக்கமுறை நூலகம் தேவை (Digital Library). இதற்கான இணைய வசதி கிராமத்தில் இருக்கும் "பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்" வழங்கும் அகண்ட அலைவரிசை இணைய வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். எண்ணிலடங்கா இணையபுத்தகங்கள் உடனுக்குடன் இணையத்தில் கிடைக்கும் வசதி.

மேலும் தேவைப்படும் தகவல்களை ஒரு நூலை அல்லது குறிப்பிட்ட நூல்களை மட்டும் நம்பி இல்லாமல் உலகம் முழுவதும் இணையத்தில் தேடி, சிறந்த கருத்துகளை தெரிந்து கொள்ளவும் உதவுகின்றது. இது ஒரு தனிமனிதனின் முன்னேற்றதிற்கு மட்டுமன்றி, கிராம முன்னேற்றத்திற்கும், இந்தியாவின் முன்னேற்றத்திற்கும், உலக முன்னேற்றத்திற்கும் பெரிதான வகையில் உதவும்.

மேலும் தாள்கள் தயாரிப்பதற்கான தேவைப்படும் மரங்கள் வெட்டபடுவதை தவிர்ப்பதன் மூலம் காசாங்காடு கிராமம் உலக சுற்றுசூழலை பாதுகாக்கும். கோள வெதும்பலை (Global Warming) குறைக்கவும் இது உதவும்.

எடுத்துக்காட்டான இணைய நூலகங்கள்:

http://www.ipl.org/
http://www.chennailibrary.com/
http://my.safaribooksonline.com/
http://books.google.com/
http://www.questia.com/Index.jsp
http://onlinebooks.library.upenn.edu/
http://www.thefreelibrary.com/