அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. தேவைகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

ஞாயிறு, 4 அக்டோபர், 2009

விவசாயிகளுக்கு இலவச மருத்துவ, மருந்து காப்புரிமை தேவை

கிராம விவசாயிகளுக்கு மருத்துவ செலவு மிகவும் அதிகாமாக உள்ளது. விவசாயத்தில் வரும் வருமானத்தை வைத்து மருத்துவ செலவு செய்வது மிகவும் கடினமாக உள்ளது.   கிராம மற்றும் நகர அரசு மருத்துவமனையில் கிடைக்கும் வசதிகள் மிகவும் அளவானதே, தனியார் மருத்துவமனைகளில் தான் அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன.

மேலும் ஒரு தனி நபருக்கு கிடைக்கும் மருத்துவ சிகிச்சைகளை பதிவு செய்வதில்லை. இதனால் நோயாளி இதற்க்கு முன் எந்த எந்த மருத்துவ சிகிச்சைகளை பெற்றார் என்பதற்கான பதிவேடு இருப்பதில்லை. இலவச மருத்துவ காப்புரிமை மற்றும் மருந்து காப்புரிமை கிடைத்தால் இதன் மூலம் நோயாளிகளுக்கு என்ன மருத்துவ செலவு செய்யப்பட்டது, மருத்துவர் என்ன சிகிச்சை அளித்தார் என்பது தெளிவாக தெரியும்.

மேலும் மருத்துவர்கள் செய்யும் சிகிச்சைகளில் குறைகள் இருப்பின் தனி நபர்  பாதிக்கபடாமல் இருக்கவும், முறைப்படியாக நஷ்ட ஈடு வழங்கவும் உதவி புரியும். மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் சரியாக சோதனை செய்யப்படாத மருந்துகளை அளிப்பதின் மூலாமாக நோயாளிகளுக்கு ஏற்படும் சங்கடங்களை நஷ்ட ஈடாக வழங்கவும் உதவி புரியும்.

இதை அனைத்தும் அரசு, இந்திய மக்களுக்கு உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு இலவசாமாக அளித்தால் மிகவும் உதவியாய் அமையும்.

இவ்வாறே வளர்ந்த நாடுகளில் விவசாயிகளை அரசு பாதுகாக்கின்றது.

மாநில மற்றும் மத்திய தேர்தலில் வாக்களிப்பதற்கு முன் இவற்றை பற்று சிறிது சிந்திப்போம்.